த.வெ.க மாநாட்டிற்கு விரையும் தொண்டர்கள் - சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் தூங்கியதால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. கட்சி தொடங்கிய பின் நடத்தப்படும் முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன. 

அதுமட்டுமல்லாமல், நடிகர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை முதலே தொண்டர்கள் மாநாட்டிற்கு வர தொடங்கி விட்டனர். இந்த நிலையில் , மாநாட்டிற்கு வருகை தந்த ரசிகர்கள் சிலர் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் ஆபத்தான நிலையில் படுத்து உறங்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tvk conference fans sleep road center median


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->