நாளை வெளியாகிறது த.வெ.கவின் இறுதிக்கட்ட மாவட்ட நிர்வாகிகள் பட்டியல்.!
tvk district excuetives final list released tomorrow
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்தக் கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி பிரமாண்டமாக நடந்தது.
இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இதனை முன்னிட்டு த.வெ.க.வில் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நிர்வாக வசதிக்காக த.வெ.க. 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என்று 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இறுதிக்கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
tvk district excuetives final list released tomorrow