42 பேர் பலி... கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு விரைந்த த.வெ.க தலைவர் விஜய்!
TVK leader Vijay rushes Kallakurichi issue
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 100 க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைப்படமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் உயிர் இழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளார். அங்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து காலை அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
TVK leader Vijay rushes Kallakurichi issue