தமிழ்நாடு பல பேருக்கு தண்ணீர் காட்டுன ஸ்டேட் மோடி சார்.. Careful-அ Handle பண்ணுங்க - தவெக தலைவர்.!!
tvk leader vijay speech about
விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. உறுதிமொழியுடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா?.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே., பேர மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. ஜனநாயக ரீதியா என் மக்களை சந்திக்க தடை போட நீங்கள் யார்?

காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் என தினம் தோறும் மக்கள் பிரச்சனைகளை மடை மாற்றி உங்கள் விரோத ஆட்சியை மன்னர் விரோத ஆட்சி போன்று நடத்தும் ஓவர்கள் ஒன்றா? இரண்டா?.. தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு நெருக்கடி? சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அமைதியாக இருக்கிறேன். அணை போட்டு ஆற்றை தடுக்கலாம். ஆனால், காற்றை தடுக்க முடியாது. அப்படி தடுக்க நினைத்தால் சூறாவளி காற்றாக ஏன் புயலாக கூட மாறும்.
பிரதமர் மோடியின் பெயரை சொல்ல எனக்கு பயம் என்கிறார்கள். மாண்புமிகு திரு மோடி ஜி அவர்களே. உங்களை பெயரை சொல்ல எனக்கு பயமில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியா நடக்கிறது? பாஜக தானே ஆட்சி செய்கிறது. ஏன் ஜி தமிழ்நாடு என்றால் மட்டும் உங்களுக்கு அலர்ஜி..? தமிழ்நாட்டின் வரி பணத்தை சரியா எடுத்துக்குறீங்க.. ஆனா மாணவர்களின் கல்விக்கான வரிப்பணத்தை மட்டும் தர மறுக்குறீங்க.. தமிழ்நாட்டை கொஞ்சம் Careful-அ Handle பண்ணுங்க மோடி சார். தமிழ்நாடு பல பேருக்கு தண்ணீர் காட்டுன ஸ்டேட் மோடி சார்” என்று பரபரப்பாக பேசினார்.
English Summary
tvk leader vijay speech about