பணம் வாங்கினாலோ, கொடுத்தாலோ இதுதான் நடக்கும் - கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை.!
tvk public secretary warning to tvk fans for money buy and give
தமிழ் பிரபல நடிகர் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் இந்தக் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்தினார்.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் பேசிய தலைவர் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

இதற்காக, நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு அது தொடர்பான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தவெக கட்சியில் பதவி வகிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதற்காக வாட்ஸ்அப் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்தும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பதவிக்கு பணம் வாங்கினாலோ அல்லது பணம் கொடுத்தாலோ, அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
English Summary
tvk public secretary warning to tvk fans for money buy and give