பொய் பிரச்சாரம், பொய் வாக்குறுதி! மறைமுகமாக அரசியல் கட்சியை போட்டு தாக்கிய விஜய்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பள்ளி பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு,  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கப்பரிசு வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசியதாவது, "இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் தம்பி, தங்கைகள் மற்றும் அவர்களுடன் வந்திருக்கும் பெற்றோர்களுக்கும், விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் என் நண்பா, நண்பிகள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.

மாணவர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் நண்பர்கள் யாராவது தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை திருத்துங்கள் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் சுய கட்டுப்பாடு ஆகியவை முக்கியம்.

அனைத்து மாணவ-மாணவியர்களும் "say no to temporary pleasure's - say no to drugs" என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளுங்கள். சமூக வலைத்தளத்தில் வருவதில் எது நல்லது எது கெட்டது என பிரித்து பார்க்க வேண்டும். 

அரசியல் கட்சிகள் பொய் பிரச்சாரம் (பொய் வாக்குறுதி) செய்து வருகின்றன. சில ஊடகங்கள் நல்ல தலைவர்களை தவறாக சிந்திக்கிறார்கள், கெட்ட தலைவர்களை நல்லவர்களாகவும் சித்திரிகிறார்கள்.

இதேபோல் ஒரு நல்ல செய்தியை தவறாகவும், கெட்ட செய்தியை நல்லதாகவும் சில ஊடகங்கள் மாற்றி கட்டமைக்கும். எனவே, செய்தி வேறு, கருத்து வேறு என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.


 

ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான பரப்புரவுகளை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் அப்படி செய்து விட்டால் அது ஒன்றே போதும் நல்ல தலைவர்கள் நமக்கு கிடைப்பார்கள். 

தமிழகத்திற்கு இப்போது தேவை நல்ல தலைவர்கள் தான். அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை. நல்ல படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நீங்கள் படிக்கும் போதே மறைமுகமாக அரசியலில் ஈடுபடுங்கள்" என்று நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay Say About TN Politics and need Good Leader


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->