அப்படிப்போடு! தமிழகத்திற்கு தற்போது தேவையான ஒன்றை தரமாக செய்த விஜய்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பள்ளி பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு,  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கப்பரிசு வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு, ஒரு சிறப்பான விழிப்புணர்வு சம்பவத்தை செய்துள்ளார். தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு இது தேவையான ஒரு விழிப்புணர்வு தான் என்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

மாணவர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட வேண்டாம் என மாணவர்களுக்கு விஜய் அறிவுரை வழங்கி உள்ளார்.

மேலும்,  உங்கள் நண்பர்கள் யாராவது தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை திருத்துங்கள். மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் சுய கட்டுப்பாடு ஆகியவை முக்கியம்.

"say no to temporary pleasure's - say no to drugs" என்று மாணவர்களை உறுதிமொழி ஏற்க வைத்த நடிகர் விஜய், சமூக வலைத்தளத்தில் வருவதில் எது நல்லது எது கெட்டது என பிரித்து பார்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

மேலும், பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த என் தம்பி, தங்கைகளுக்கு வாழ்த்துக்கள். ஒரு பாசிட்டிவ் பவர் இருப்பவர்களை பார்த்தால், நமக்கு ஒரு சக்தி கிடைக்கும். இன்று எனக்கு அந்த சக்தி கிடைத்துள்ளது. 

தமிழ்நாட்டுக்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான். நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள். அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை. 

நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்று சிந்தனை செய்யும் நீங்கள், அரசியல் அரசியலையும் தேர்வு செய்ய வேண்டும்" என்று நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Vijay say say no to temporary pleasures and say no to drugs


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->