ஒரே நாளில் 20 டன் அளவு தங்கம் வாங்கி தமிழக மக்கள் சாதனை.!
twenty done gold sale in tamilnadu for atchaya thiruthiyai
ஒரே நாளில் 20 டன் அளவு தங்கம் வாங்கி தமிழக மக்கள் சாதனை.!
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் லட்சுமி கடாட்சம் அதிகளவில் இருக்கும். இதனால், அன்றைய தினம் தங்கம், வெள்ளி, வீடு, வீட்டு மனைகள் வாங்கினால் சேமிப்பு அதிகரிக்கும் என்பார்கள்.
![](https://img.seithipunal.com/media/gold-f4qr4.png)
அந்த வகையில், இந்த வருடத்திற்கான அட்சய திருதியை நேற்று முன்தினம் வந்ததால், பொதுமக்கள், தங்க நகைகளை வாங்க நகை கடைகளில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள் காலை ஏழு மணி முதல் இரவு முழுவதும் திறந்திருந்தன. அதுமட்டுமல்லாமல், நகை கடைகளில் முன்பதிவு, தள்ளுபடி என்று பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அட்சய திருதியை நாளில் ஒரு குட்டி தங்கமாவது வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் சேமிப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள், தங்களுக்கு பிடித்த நகைகளை வாங்கிச் சென்றனர்.
![](https://img.seithipunal.com/media/GOLD2.jpg)
பொதுவாக அட்சய திருதியை நாளில் தங்கம் விலை அதிகரிப்பது என்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.44,840க்கு விற்பனையானது.
கடந்த வருடம் அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பில் 20 டன் அளவுக்கு நகைகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
twenty done gold sale in tamilnadu for atchaya thiruthiyai