கள்ள சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை - 20 பேர் கைது.!  - Seithipunal
Seithipunal


கள்ள சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை - 20 பேர் கைது.! 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருக்கிடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்கான அனுமதிச் சீட்டுகளை கள்ள சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் படி, திருவல்லிக்கேணி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் இரயில்வே ஸ்டேசன், பெல்ஸ் ரோடு அஞ்சப்பர் உணவகம் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதுவரைக்கும் இந்த பகுதிகளில் கிரிக்கெட் போட்டிக்கான அனுமதிசீட்டினை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த ஐம்பத்தைந்து டிக்கெட்டுகள் மற்றும் ரூ.52,200 பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty peoples arrested for sale ipl ticket in fake


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->