விருதுநகர் சிறையில் இரு தரப்பினருக்கிடையே மோதல் - 27 கைதிகள் திடீர் மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் சிறையில் இரு தரப்பினருக்கிடையே மோதல் - 27 கைதிகள் திடீர் மாற்றம்.!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறையில் பல்வேறு குற்றவழக்குகளில் ஏராளமானக் கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் இட நெருக்கடி காரணமாக கைதிகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். 

இந்த நிலையில் நேற்று விருதுநகர் மாவட்ட சிறைக்குள் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மதுரை கண்ணன் மற்றும் கைதி வடிவேல் முருகன் உள்ளிட்டோர் இடையே தகராறு ஏற்படும் சூழல் உருவானது. 

அங்கு கைகலப்பு ஆரம்பிக்கும்போதே சிறைக் காவலர்கள் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து உதவி சிறை அலுவலர் பரசுராம், விசாரணை செய்து வடிவேல் முருகன், மதுரை கண்ணன் உள்ளிட்டோரைத் தனித்தனி அறைகளில் அடைத்தனர். 

இதற்கிடையே விருதுநகர் சிறையில் பாரபட்சம் பார்க்கப்படுவதாகவும் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக சிறை நிர்வாக அதிகாரிகள் செயல்படுவதாகவும் கூறி கைதிகள் ரகளையில் ஈடுபட்டு, சிறைப் பொருட்களும் சூறையாடப்பட்டன.

இதையடுத்து போலீசார் இந்தப் பிரச்சினைக்கு காரணமாக இருந்த வடிவேல் முருகன் உள்ளிட்ட அவரது குழுவைச் சேர்ந்த 27 கைதிகளை மதுரை மத்திய சிறைக்கும், திருச்சி சிறைக்கும் இடமாற்றம் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty seven accuest transfer in viruthunagar jail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->