12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - மதரஸா ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை.!  - Seithipunal
Seithipunal


இளையான்குடி அருகே பன்னிரெண்டு வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் இளையான்குடி பகுதியில் உள்ள மதரஸாவில் அரபு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, மதரஸாவில் பயின்ற பன்னிரெண்டு வயது சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன் படி போலீசார், ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்த சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம், ஆசிரியர் சாகுல் ஹமீதுக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty years jail penalty to


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->