திருவள்ளூரில் பரபரப்பு: ஒரே வாலிபருடன் இரட்டை சகோதரிகள் விபரீத காதல்.! பறிபோன ஒரு உயிர்..! தீவிர சிகிச்சையில் இருவர்...!
Twin sisters who fell in love with the same boy got poisoned in tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே வாலிபரை காதலித்த இரட்டை சகோதரிகள் விஷம் குடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே ஒரத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் 15 வயது இரட்டை சகோதரிகள். இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான மகேஷ்(22) என்பவரை காதலித்து வந்துள்ளனர். மகேஷும் இரட்டை சகோதரிகளை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இந்த விபரீத காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகேசையும், இரட்டை சகோதரிகளையும் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில் மனவேதனையடைந்த மகேஷ் மற்றும் இரட்டை சகோதரிகள், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து 3 பேரும் நேற்று மாலை கொசஸ்தலை ஆறு அருகே சென்று கொக்கு மருந்து சாப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் மயங்கி கிடந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரட்டை சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மகேஷ் மற்றும் மற்றொரு பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Twin sisters who fell in love with the same boy got poisoned in tiruvallur