#நாமக்கல்: அதிரவைத்த தொடர் கொலைகள்...5000/- ரூபாய்க்கு முதியவர்களுக்கு விஷ ஊசி... அரசு ஊழியரின் பகீர் செயல்! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பிணவறையில் உதவியாளராக பணிபுரிந்தவர் கடந்த சில வருடங்களில் 300க்கும் மேற்பட்டோரை கருணை கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறை கைது செய்து விசாரித்தனர். தற்போது அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டாலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிணவரை தற்காலிக உதவியாளராக வேலை செய்து வருபவர் மோகன்ராஜ் வயது 50. இவர் அப்பகுதியில் ஐயாயிரம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு படுத்த படுக்கையாக உள்ள முதியவர்களை பூச்சி மருந்து விஷ ஊசி போட்டு கொலை செய்வதாக  சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவியது.

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை மோகன் ராஜா அழைத்து விசாரித்தது மேலும் அவர் மீது சில பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை தொடர்ந்து பதினைந்து வருடமாக இந்த தொழிலை அவர் செய்து வருவதாகவும்  ஒரு ஆளுக்கு 5000 ரூபாய் வீதம் காசு வாங்குவதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த 15 ஆண்டுகளில் இவர் 300 பேரை கொலை செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களது வீட்டில் உள்ள முதியவர்கள் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும்போது அவர்களைப் பார்த்துக் கொள்ள ஆளில்லாத காரணம் மற்றும் அவர்களுக்காகும் அதிகமான மருத்துவ செலவு மேலும் அவர்கள் நோயினால் நீண்ட காலம் படுத்த படுக்கையாக இருந்து கஷ்டப்படுதல் இது போன்ற காரணங்களால் அவர்களை கருணை கொலை செய்ய பெரும்பாலான உறவினர்கள் முடிவெடுக்கின்றனர். இதற்கு மோகன்ராஜ் போன்ற ஒரு சில ஆட்கள் துணை போகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் பிணவரை ஊழியரே 300க்கும் அதிகமான மக்களை கருணை கொலை செய்திருந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twmperoary govt staff did mercy killin for his earninh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->