சென்னையில் அடுத்தடுத்து இரண்டு கண்டெய்னர் லாரி மோதி விபத்து.!
Two Container lorry accident in chennai
சென்னையில் அடுத்தடுத்து இரண்டு கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர்கள் காயமடைந்துள்ளனர்.
சென்னை துறைமுகத்திலிருந்து இரண்டு கண்டைனர் லாரிகள் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாப்பான்சத்திரம் அருகே, முன்னால் சென்ற வாகனம் திடீரென நின்றதால், பின்னால் வந்த 2 கன்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த உபத்தில் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் காயமடைந்து உள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த லாரி ஓட்டுனர்களை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கிய இரண்டு கண்டெய்னர் லாரிகளையும் சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.
மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Two Container lorry accident in chennai