சென்னையில் இன்று முதல் மின்சார ரயில்கள் இயங்காது - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில், புறநகர் பகுதிகளுக்கு பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த புற நகர் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை-தாம்பரம், கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் என்று பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. 

இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 15 மின்சார ரயில்கள் மே 18,19 தேதிகளில் அதாவது, (இன்றும், நாளையும்) ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதேபோல், செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் எட்டு ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two days not run electric train in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->