ஒரே அமரர் ஊர்தியில் 2 உடல்கள் - வீடியோ மூலம் வெளிவந்த அரசு ஊழியரின் அலட்சியம்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டிபிரபு. திருப்பூரில் ஓட்டுநராக வேலை செய்து வந்த இவர், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 11-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தற்போது பாண்டிபிரபுவின் உடல் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 108 அமரர் ஊர்தி மூலமாக சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமரர் ஊர்தியில் ஏற்கனவே விருதுநகரை சேர்ந்த ஒருவரின் உடல் ஏற்றி வைக்கப்பட்ட நிலையில், அதே அமரர் ஊர்தியில் பாண்டிபிரபுவின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் ஏற்ற முயன்றனர்.

இதற்கு பாண்டிபிரபுவின் தந்தை, கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அமரர் ஊர்தியின் அவலத்தை வீடியோ எடுத்து வெளியிட்டு நியாயம் கேட்டார். இதையடுத்து, இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் கூறுகையில், '108 அமரர் ஊர்தியை கால்சென்டரில் பதிவு செய்து அவர்கள்தான் ஊர்தியை ஒதுக்கீடு செய்வார்கள். விருதுநகர் வரை செல்லும் ஊர்தியில் பாண்டிபிரபுவின் உடலை எடுத்துச்செல்ல அவருடைய தந்தை முதலில் சம்மதித்துள்ளார். அதன்பிறகு எதிர்ப்பு தெரிவித்ததால், கால்சென்டர் மூலமாக தனி ஊர்தி ஒதுக்கீடு செய்யப்பட்டு உடலை அனுப்பி வைத்தனர்' என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two dead bodys ine ambulance in tirupur hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->