கடலில் சண்டை போட்ட இரண்டு மீனவக்குழுக்கள்! போலீஸ் விசாரணை!
Two fishing groups fought in the sea Police investigation
தாழங்குடா பகுதி மீனவர்களை தாக்கி மீன்களை பறித்துச் சென்ற வீராம்பட்டினம் மீனவர்கள். இது தொடர்பாக காவல்துறை தாழங்குடா மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் சஞ்சய் குமார், இளம்பரிதி, வடிவேல், கனகராஜ் ஆகியோர் பைபர் படக்கில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். புதுவை மாநிலம் நலவாடு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மற்றொரு படகில் வந்த நான்கு பேர் தாழங்குடா மீனவர்களிடம் நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் தாழங்குடாவை சேர்ந்தவர்கள் என்று பதில் கூறியதால் இதனை கேட்டு ஆத்திரமடைந்த நான்கு பேரும் தங்கள் புதுவை மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வந்து நீங்கள் எதற்காக மீன்பிடிக்கிறீர்கள்? எங்கள் பகுதியின் மீன் பிடிப்பதற்கு உங்களுக்கு யார் அனுமதி அளித்தனர். உங்கள் படகை சிறை பிடித்து எங்கள் ஊருக்கு இழுத்துச் செல்ல போகிறோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் மீன் பிடிப்பதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கேட்ட தாழங்குடா மீனவர்களை வீராம்பட்டினம் மீனவர்கள் சஞ்சய் குமாரை தாக்கினர். அதில் சஞ்சய் குமார் பலத்த காயமடைந்தார். மேலும் தாழங்குடா மீனவர்களின் படையில் இருந்த மீன்களை பறித்து சென்றுள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பித்து கடலூர் பகுதிக்கு வந்த மீனவர்கள் பலத்த காயம் அடைந்த சஞ்சய் குமாரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் தாழங்குடா மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட வீராம்பட்டினம் மீனவர்கள் யார் என்று குறித்து கடலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Two fishing groups fought in the sea Police investigation