புழல் பெண்கள் சிறையில் சிறை காவலர் மீது வெளிநாட்டு பெண் கைதிகள் தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


புழல் பெண்கள் சிறையில் சிறை காவலர் மீது வெளிநாட்டு பெண் கைதிகள் தாக்குதல்.!

சென்னையில் உள்ள புழல் பெண்கள் சிறையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில், உகாண்டா நாட்டைச் சேர்ந்த சாண்ட்ரா மற்றும் மாலத்தீவை சேர்ந்த சம்சியா உள்ளிட்ட இரண்டு வெளிநாட்டு பெண்கள், போதை பொருள் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த சிறையில், சிறை காவலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெளிநாட்டு பெண் கைதிகள் இருவரும் தங்கள் அறையில் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். பின்னர் இருவரையும் சிறை காவலர்கள் கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த வெளிநாட்டு பெண் கைதிகள் இருவரும், பெண் சிறை காவலரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் படி காவல் ஆய்வாளர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புழல் பெண்கள் சிறையில் வெளிநாட்டு கைதிகள் சிறை காவலரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two foreign accuests attack jail officer in puzhal womans jail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->