17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - புகாரால் சிக்கிய வடமாநில வாலிபர்கள்.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள சிதமாரி பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார் மற்றும் ரூபேஷ்குமார். இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து  வருகின்றனர்.

இந்த நிலையில், ரூபேஷ்குமார் கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த பதினேழு வயது சிறுமி ஒருவர், எதிர்பாராத விதமாக ரூபேஷ்குமாரை சந்தித்து, தனக்கு படிப்பு வராததாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வேலை தேடி தனியாக திருப்பூர் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ரூபேஷ், நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன். தங்கும் வசதியும் செய்து தருகிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி தான் தங்கி இருந்த வாடகை வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து ரூபேஷ், வீட்டின் உரிமையாளரிடம் பேசி புதிதாக ஆட்கள் வந்துள்ளனர். அதனால், இன்னொரு வீடு வாடகைக்கு வேண்டும் என்று கூறி பக்கத்து வீட்டின் சாவியை வாங்கி அந்த சிறுமியிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, ரூபேஷ் கடந்த 31-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை கொண்டாட கேக் வெட்டலாம் எனக் கூறி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அழைத்துள்ளனர்.

மேலும், பையில் வைத்திருந்த மதுபாட்டில்களை எடுத்து குடிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அந்த சிறுமி மறுப்புத் தெரிவித்ததனால், ரூபேஷ் நண்பருடன் சேர்ந்து மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். அதனை குடித்த அந்த சிறுமி சில நிமிடத்தில் மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் இருவரும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் செய்தார். அதன் பேரில் நிதிஷ்குமார் மற்றும் ரூபேஷ் குமார் உள்ளிட்ட இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two north indians arrested for harassment case in tirupur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->