ஆம்ஸ்ட்ராங் கொலை - பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரைக்கும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இவர்களில் தப்பியோட முயன்றதாக திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அதாவது, எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் மலர்க்கொடி மற்றும் ஹரிஹரன் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மலர்க்கொடி ஏற்கனவே கைது செய்யப்பட்ட அருளுடன் தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசிவந்தது தெரியவந்துள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை வங்கி பரிவர்த்தனைகளை கண்காணித்து அதன் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மலர்க்கொடி, ஹரிஹரனிடம் செம்பியம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrest bsp leader amstrong murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->