தஞ்சையில் சோகம் : சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலி - 40 பேர் படுகாயம்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே ஆம்னி பேருந்து ஒன்று நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து இந்தப் பேருந்து கீழையூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. 

இதனால், நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், நாற்பது பேர் படுகாயமடைந்தனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்தவர்களையும் அவர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died and forty peoples injured for amni bus accident in thanjavur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->