தூத்துக்குடியில் சோகம் - பம்பு செட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 2 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் சோகம் - பம்பு செட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 2 பேர் பலி.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவருக்கு ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி பகுதியில் சொந்தமாகத் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு அருகே மோட்டார் பம்பு செட் ரூமில் வயரிங் வேலை நடந்து கொண்டிருந்தது.

அங்கு சிந்தலகட்டை கிராமத்தைச் சேர்ந்த மரியதாஸ், குலசேகரநல்லூரைச் சேர்ந்த அரியநாயகம், வடக்கு ஆரைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ், கவர்னகிரியை சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்ட நான்குபேரும் வேலைசெய்து கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென அந்த பாம்பு செட் ரூமின் தரைதளம் இடிந்து விழுந்தது. இதனால் வேலை செய்து கொண்டிருந்த நான்கு பேரும் அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் தத்தளித்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அந்தத் தகவலின் படி, தீயணைப்புப் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரியதாஸ், சுப்புராஜ் ஆகியோரை சடலமாகவும், மாரிமுத்து, அரியநாயகம் உள்ளிட்டோரை உயிருடன் மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died for fell down well in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->