திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூரில் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில். பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், யானை தெய்வானை மதம் பிடிப்பதுபோல் இன்று நடந்துகொண்டது. அதாவது திடீரென இன்று காலை யானைப் பாகனான உதயகுமாரையும், கோயிலுக்கு வந்த அவரது உறவினர் சிசுபாலன் என்பவரையும் தாக்கியது.

இந்தத் தாக்குதலில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கோவிலில் இருந்தவர்கள் படுகாயமடைந்த யானைப் பாகன் உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died for thiruchenthur temple elephant hit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->