கன்னியாகுமரி|| ராட்சத அலையில் சிக்கி 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி|| ராட்சத அலையில் சிக்கி 2 பேர் பலி.!

வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கன்னியாகுமரிக்கு வருகைத் தந்து சூரியன் உதயம் மற்றும் அஸ்தமன காட்சிகளை பார்ப்பதோடு, கடலில் ஆனந்த குளியலிடுவதும் வழக்கம். 

அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டெக்னோ பார்க் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மணி, சுரேஷ், பிந்து உள்பட 10 பேர் நேற்று சுற்றுலாவாக வேனில் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் கோவளம் கடற்கரை பகுதியை பார்ப்பதற்காக புறப்பட்டனர். 

அங்கு அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, மணி, சுரேஷ், பிந்து உள்ளிட்டோர் கடல் அலையில் சிக்கினர். இதைப்பார்த்த சக சுற்றுலா பயணிகள் கத்திக் கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியில் இருந்த மீனவர்கள் மற்றும் சிலர் ஓடிவந்து மூன்று பேரையும் மீட்க முயன்றனர். 

அவர்களால் பிந்துவை மட்டுமே மீட்க முடிந்தது. மற்ற இருவரையும் கடல் அலை இழுத்துச் சென்று விட்டது. இதுகுறித்து  தகவலறிந்த கன்னியாகுமரி கடலோர காவல் குழும போலீசார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு அலையில் இருவரும் கடற்கரைக்கு வந்துள்ளனர். 

அவர்களை, போலீசார் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples drowned sea in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->