திண்டுக்கல் || சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேர் கைது - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல்துறையினர் ஏ.வி.பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது டாஸ்மாக் கடையை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த சக்திவேல் என்பவரை கைது செய்துள்ளனர். 

மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார், அவரிடமிருந்த 69 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல் காணப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர். 

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சிங்காரக்கோட்டையை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த 63 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், கணேசனை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two persons arrested for liquor selling in Dindigul


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->