விடாது பெய்த மழை - சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கல்லூரி பேருந்துகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக பள்ளிப்பாளையத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவேரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது. 

இந்த மழை நீரில் இரண்டு தனியார் கல்லூரி பேருந்துகள் சிக்கிக் கொண்டன. பேருந்துக்குள் இருந்த சுமார் 40 மாணவர்கள் வெளியே வர முடியாமல் அரை மணி நேரம் சிக்கித்தவித்தனர்.

இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மாணவர்களை பத்திரமாக மீட்டனர். சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரை அகற்றும் மோட்டார் கடந்த சில நாட்களாக சரியாக செயல்படாததால் மழைநீர் தேங்குவதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two private college buses stuck


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->