வடலூரில் பள்ளி சீருடையில் சுற்றித் திரிந்த மாணவிகள் - விசாரணையில் வெளிவந்த பகிர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


வடலூரில் பள்ளி சீருடையில் சுற்றித் திரிந்த மாணவிகள் - விசாரணையில் வெளிவந்த பகிர் தகவல்.!!

கடலூர் மாவட்ட போலீசார் நேற்று முன்தினம் வடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடலூரில் 15 வயதுடைய இரண்டு பள்ளி மாணவிகள் பள்ளி சீருடையுடன் சுற்றித்திரிந்தனர். இதை பார்த்த போலீசார், அந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். 

அந்த விசாரணையில் அவர்கள், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவர்களுக்கு கணித பாடம் படிப்பதற்கு கஷ்டமாக இருந்ததால், டியூசன் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியதும் தெரியவந்தது. 

மேலும், அவர்கள் நேற்று முன்தினம் புதுச்சேரி சென்று பகல் முழுவதும் அங்கு சுற்றி விட்டு இரவு வீட்டுக்கு சென்றால் பெற்றோர் திட்டுவார்கள் என்று பயந்து கடலூரில் இருந்து வடலூருக்கு வந்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார், அந்த மாணவிகளிடம் தனியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, படிக்க கஷ்டமாக இருந்தால் பெற்றோரிடம் கூறி தீர்வு காண வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவிகளை பாதுகாப்புடன் தங்க வைத்து, அவர்களின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two school students around vadalur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->