வயநாடு நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு திருப்பூர் ஆட்சியரிடம் பள்ளி மாணவிகள் இரண்டு பேர் நிதி உதவி!
Two schoolgirls from Tirupur collector have donated funds to the people affected by the Wayanad landslides
வயநாடு நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு திருப்பூர் ஆட்சியரிடம் பள்ளி மாணவிகள் இரண்டு பேர் நிதி வழங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக சூழல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் நிலசரிவு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலசரிவால் வீடுகளை இழந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு நிவாரண நிதியாக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பிரபலங்கள் மற்றும் சினிமா நடிகர்கள் நிதி உதவி செய்து வருகின்றனர். சமீபத்தில் நேற்று நடிகர் தனுஷ் வயநாட்டில் நிலசரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 லட்சம் நிதி உதவி செய்தார்.
இந்தநிலையில் திருப்பூர் இருக்கும் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாணவிகள் இரண்டு பேர். வாவிபாளையம் அரசு பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். சகோதரிகள் ஆன இரண்டு பேரும் கேரளா மாநிலம் வயநாடு நிலசரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்யும் செய்துள்ளனர்.
இரண்டு பேரும் தங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகே உள்ள பொதுமக்களிடம் நேரடியாக சென்று நிதி வசூளித்து பெற்ற நிதியை பெற்று இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜிடம் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவிகள் செய்த இந்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Two schoolgirls from Tirupur collector have donated funds to the people affected by the Wayanad landslides