நின்று கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.! - Seithipunal
Seithipunal


நின்று கொண்டிருந்தவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் சம்பவத்தன்று உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆக்கூர் கூட்டு ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று உள்ளார்.

அப்பொழுது அவர் வெளியில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதி உள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த சாமிநாதனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இருப்பினும் சாமிநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two wheeler collided with a person standing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->