மயிலாடுதுறை || மூதாட்டி கொலை வழக்கு - முன்னாள் திமுக எம்எல்ஏக்களுக்கு சிறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சமீப காலமாகவே திமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், பொன்முடிக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் கல்யாணம் அவரது மகன் குத்தாலம்  அன்பழகன் ஆகியோர் உள்ளிட்ட ஆறு பேருக்கு இரண்டு ஆண்டு  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவரது வீட்டில் கடந்த 2012 பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலில், மீனாட்சி காயமடைந்து குத்தாலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

மீனாட்சியை தாக்கிய வழக்கில் பிச்சைமுத்து மகன்கள் பி.சந்திரசேகர், பி.கல்யாணம், கோவிந்தராஜ், பி.கல்யாணம் மகன்கள் க.அன்பழகன் க.அறிவழகன் மற்றும் மனோகர், ரவி உள்ளிட்டோர் மீது குத்தாலம் காவல் நிலையத்தில், 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவுற்ற நிலையில், நீதிபதி கலைவாணி நேற்று தீர்ப்பு வழங்கினார். அவரது தீர்ப்பில், குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து  உத்தரவிட்டுள்ளார். 

தண்டனையை ஒத்தி வைக்கக்கோரி அளிக்கப்பட்ட மனுவின் மீது ஆணை பிறப்பித்த நீதிமன்றம் வழக்கின் மேல்முறையீட்டுக்காக ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two years jail penalty to dml mlas for mayiladuthurai oman murder case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->