உளுந்தூர்பேட்டை | போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்! வசமாக சிக்கிய 4 பேர்.! பின்னணியில் அதிர்ச்சி.!
ulundurpet liquor bottles seized
புதுச்சேரியில் இருந்து மினி லாரி மற்றும் காரில் மதுபாட்டிகள் கடத்தி வருவதாக கள்ளக்குறிச்சி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீசார், உளுந்தூர்பேட்டை போலீசார் இன்று காலை செங்குறிஞ்சி சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி ஈடுபட முயன்ற போது லாரி நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
அப்போது லாரி மற்றும் காரில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். நான்கு பேர் போலீசாரிடம் சிக்கியதில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பின்னர் சோதனை செய்தபோது அதில் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்த விசாரணையில், புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சம் ஆகும். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
ulundurpet liquor bottles seized