மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக இயக்குநருக்கு UNESCO விருது
UNESCO awarded for jagadeesh pagan sudhakar
உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்காக UNESCO வால் மைக்கேல் பட்டீஸ் விருதுக்கு ஜகதீஷ் பகான் சுதாகர் தேர்வாகியுள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் இயற்கை வளத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக தேசிய கடல்வாழ் உயிரின பூங்காவின் இயக்குநர் ஜகதீஷ் பகான் சுதாகருக்கு மைக்கேல் பட்டீஸ் விருதை யெனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விருதானது ஜீன் 14 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வழங்கப்பட உள்ளது.
ஜகதீஷ் பகான் சுதாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விருதை வனத்துறை பணியாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும், சுய உதவிக்குழு வனப்பாதுகாப்பு குழுவினரின் உதவியுடன் மரக்கன்றுகள் நடுதல், கடலோரங்களில் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடுதல், கடல் ஆமைகளை பாதுகாக்க அதன் முட்டைகளை சேகரித்து குஞ்சகளை கடலில் விடுதல் போன்ற பணிகளை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
பாராட்டு தெரிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
English Summary
UNESCO awarded for jagadeesh pagan sudhakar