தமிழகம் வரும் அமித்ஷா - பாதுகாப்பு பணி தீவிரம்.!
union minister amitsha come in tamilnadu
இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் 150-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56-வது ஆண்டு விழா இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். இந்த விழாவில் அவர், ஜம்மு-காஷ்மீரில் 32 அறைகள் அடங்கிய சி.ஐ.எஸ்.எப்-ன் முகாம் அலுவலகம், கொல்கத்தாவில் ஆயுதங்கள் வைப்பிடம், நொய்டாவில் 240 வீரர்களுக்கான குடியிருப்பு, சிவகங்கையில் உள்ள 4-வது பட்டாலியன் பிரிவில் 27 அதிகாரிகள் தங்கும் விடுதி மற்றும் 128 வீரர்களுக்கான குடியிருப்பு, ஐதராபாத்தில் தீயணைப்பு நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
இதைத் தொடர்ந்து அவர் குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் கன்னியாகுமரி வரையிலான 6,553 கி.மீ. தொலைவிலான சைக்கிள் பேரணியையும் தொடங்கி வைக்கிறார். அமித்ஷாவின் வருகைக்காக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
union minister amitsha come in tamilnadu