பா.ஜ.கவை பார்த்து இவர்களுக்கு பயம் - மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
union minister L Murugan speech
நாடு முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி மொத்தம் 40 தொகுதிகளிலும் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மத்திய மந்திரியும் நீலகிரி தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் சுற்றுலா மையமான நீலகிரி மாவட்டத்தை மேம்படுத்த திட்டம் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்க மத்திய மந்திரியை சந்தித்து இரண்டு முறை வலியுறுத்தப்பட்டது.
உள்ளூர் தேயிலை விவசாயிகள், உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக விலைக்கு பச்சை தேயிலை வாங்குவார்கள். பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு 'ஷூட்டிங் இந்தியா' என என்ற திட்டத்தை அறிவித்து வெளிநாடுகளில் இருந்து சினிமா படங்கள் எடுக்க நீலகிரி வருபவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
நீலகிரியை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ. 11 லட்சம் கோடி கொடுத்துள்ளது.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், குடிநீர் இணைப்பு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் 5 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு இலவச திட்டம் போன்றவற்றிற்கு மத்திய அரசு நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. பா.ஜ.கவை பார்த்து அ.தி.மு.க., தி.மு.க பயப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
English Summary
union minister L Murugan speech