ராமநாதபுரத்தில் வெடித்த மேக வெடிப்பால் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை!....பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்! - Seithipunal
Seithipunal


தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மலை முதல் கனமழை பெய்து வருகிறது.

அதன் படி, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு திடீரென வெடித்த மேக வெடிப்பால் கனமழை தொடங்கியது இன்று காலை வரை விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால்  ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மேலும், ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 இடங்களில்   வரலாறு காணாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டு நாட்களாக முடங்கி உள்ளது.

ராமநாதபுரம் மாவடட்த்தில், கடந்த 69 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத  44 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக ராமேசுவரத்தில் 30 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unprecedented rain poured down due to cloudburst in ramanathapuram the normal life of the public is paralyzed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->