#காஞ்சிபுரம் : உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்டப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் சாலையில் வடக்கு பட்டு பகுதியை சேர்ந்த பழனி என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 31 ஆயிரம் பணத்தை எடுத்து வந்துள்ளார். வாகன சோதையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் அவரிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின்னாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூர் ஆர். டி.ஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unregistered case Confiscation election flying squad


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->