அமெரிக்க தூதரகத்தில் போலி சான்றிதழ்: கையும் களவுமாக பிடிபட்ட ஆந்திர வாலிபர்! - Seithipunal
Seithipunal


அமெரிக்க துணை தூதரகத்தில் விசா பெறுவதற்காக போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹேம்நாத் (வயது 24). இவர் தனது மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல விசா வேண்டும் என சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் விண்ணப்பித்தார். 

ஹேம்நாத் நேர்முக தேர்விற்காக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் கடந்த 16ஆம் தேதி வந்தபோது அவரது ஆவணங்களை சரி பார்த்த அதிகாரிகள் அதிலிருந்து பி.டெக் சான்றிதழ் போலியானது என கண்டுபிடித்தனர். 

இது தொடர்பாக அமெரிக்க துணை தூதராக அதிகாரிகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் ஹேம்நாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் ஆந்திரா பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபாபு (வயது 35) என்பவர் போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்ததாக தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனி படை அமைத்து பல்நாடு மாவட்டத்திற்கு சென்று ஹரிபாபுவை கைது செய்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மும்பையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் பின்னர் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சொந்த ஊரில் எக்கோ ஓவர்சீஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் அலுவலகம் தொடங்கியதாகவும் தெரியவந்துள்ளது. 

இதன் மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான கல்வி சான்றிதழ் தயாரித்து கொடுத்து தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஹரிபாபு பயன்படுத்திய கணினி, செல்போன் போன்ற பொருட்களையும் அவரிடம் இருந்த ரூ. 2 லட்சம் பணம் மற்றும் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். 

பின்னர் ஹரிபாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர் ஹேமநாத் என்பவர் மீதும் வழக்கு பதிய வாய்ப்பு உள்ளது என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US Embassy get visa to Fake certificate Andhra youth arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->