7 நாள் தொடர் சிகிச்சை - வைகோவின் தற்போதைய உடல்நிலை என்ன?!  - Seithipunal
Seithipunal


கடந்த மே 25ஆம் தேதி மதிமுக தலைவர் வைகோ தனது வீட்டில் கால் இடறி கீழே விழுந்து விழுந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஏழு நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

கீழே விழுந்ததில் வைகோவின் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதற்காக சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைகோ விரைவில் உடல்நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு நலம் விசாரித்தனர். 

குறிப்பாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் வைகோவை மருத்துவமனைக்கே நேரில் சென்று  நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், கடந்த ஏழு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வைகோ, இன்று மாலை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.

சிறிது காலம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko Discharge in Hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->