இடது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினா வைகோ! 10 நாள் யாரும் வரவேண்டாம்!!
vaiko returned home after left shoulder surgery
இடது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு திரும்பினார்.
எதிர்பாராவிதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.
சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் பெறுவார்கள். வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோவின் மகனும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான துரை வைகோ தகவல் தெரிவித்தார்.
அதனை,அடுத்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வைகோ விரைவில் நலம் பெற வேண்டுமென அறிக்கை விட்டனர். இடது தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து மருத்துமனையில் இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இந்நிலையில், இடது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு திரும்பினார். அதனை அடுத்து அடுத்த 10 நாட்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நிர்வாகிகள் யாரும் சந்திக்க வேண்டாம் என மதிமுக தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்த பட்டுள்ளது.
English Summary
vaiko returned home after left shoulder surgery