வந்தே பாரத்: நடிகர் பார்த்திபன் போட்ட ட்விட்! வாசகமாக சிக்கிய சேலம் ஒப்பந்ததாரர்! - Seithipunal
Seithipunal


வந்தே பாரத் ரயிலில் உணவு மோசம் என நடிகர் பார்த்திபன் புகார் அளித்திருந்த நிலையில், உணவை வழங்கிய ஒப்பந்ததாரருக்கு ரயில்வே நிர்வாகம் அபராதம் விதித்து கடுமையான எச்சரிக்கையை கொடுத்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

கடந்த 13ம் தேதி நடிகருமான இயக்குனரும், பார்த்திபன், சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது அவருக்கு ரயிலில் கொடுக்கப்பட்ட உணவு தரமானதாக இல்லை என்று, நடிகர் பார்த்திபன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்த அவரின் சமூகவலைத்தள பதிவில், "முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. 'வந்தே பாரத்'-தில் தந்தே உணவு தரமாக இல்லை.

பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென..." என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்திருந்தார்.

நடிகர் பார்த்திபன் கொடுத்த புகார் குறித்து விசாரணைக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், சேலத்தைச் சேர்ந்த உணவு ஒப்பந்ததாரர் வழங்கியது என தெரிந்ததும் அவருக்கு சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், இனிமேல் உணவு மிகவும் தரமானதாக இருக்க வேண்டும் எனவும் ஒப்பந்ததாரருக்கு சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vande Bharat train food issue actor parthiban complaint reply


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->