வந்தே பாரத் ரயில் சேவை நேரம் திடீர் மாற்றம்! - Seithipunal
Seithipunal


கோவை-பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரம் மார்ச் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 

கோவையில் இருந்து வந்தே பாரத் ரயில் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும். 

மீண்டும் பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை வந்தடையும். 

இந்த நேர மாற்றம் வருகின்ற மார்ச் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. கோவை கே.எஸ்.ஆர். பெங்களூர் இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்டது. 

இந்த ரயில் சேவை வருகின்ற மார்ச் 5 ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vande Bharat train service time change 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->