வாணியம்பாடி: திறக்கப்பட்ட 5 மாதத்தில் அரசுப் பள்ளி மேற்கூரை சிமெண்ட் பூச்சு விழுந்து 3 மாணவர்கள் காயம்! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடி அருகேயுள்ள சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் படிக்கும் போது, வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த பள்ளிக்காக 2022-23 ஆம் நிதியாண்டில், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. இந்தக் கட்டடங்கள் கடந்த செப்டம்பரில் திறந்து வைக்கப்பட்டன.  

சமீபத்தில் கட்டப்பட்ட வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு அசன்று விழுந்து மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  

சமீபத்தில்தான் கட்டப்பட்ட வகுப்பறை இவ்வாறு சேதமடைந்தததால், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியும் கோபமும் தெரிவித்துள்ளனர். 

மேலும், பள்ளி கட்டிடப் பணியில் தரமில்லா வேலைப்பாடு மேற்கொள்ளப்பட்டதா? ஊழல் செய்த அதிகாரிகள் மெது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaniyambadi School Building Damage in 5 month


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->