விழுப்புரம் :: பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த திண்டிவனம் அருகே ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலராக கருணாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அருகிலுள்ள மற்றொரு கிராமமான ஓலக்கூர் கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பு ஓலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் தன்னுடைய நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என கிராம அலுவலர் அணுகியுள்ளார். 

அசோக்கிடம் கிராம அலுவலர் கருணாகரன் பட்டா மாறுதலுக்காக ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அசோக் விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார். அவர்களின் ஆலோசனைப்படி நேற்று ஓமலூர் கிராம சேவை மைய கட்டிடத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கருணாகரனிடம் ரூ.5,000 லஞ்சப் பணத்தை அசோக் வழங்கி உள்ளார். 

அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தை உள்பக்கமாக பூட்டி கருணாகரனிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நீண்ட நேரமாக விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் கருணாகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAO arrested for taking Rs5000 bribe patta changing


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->