படுகொலை செய்யப்பட்ட கோவில்பத்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! - Seithipunal
Seithipunal


மணல் கொள்ளையர்களலால் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி, முறப்பநாடு கோவில்பத்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் திரு. லூர்து பிரான்சிஸ் (வயது 53) த/பெ. திரு.யேசுவடியான், என்பவரை இன்று மதியம் அவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். 

தலை மற்றும் கைகளில் பலத்த காயமுற்ற திரு. லூர்து பிரான்சிஸ் அவர்கள் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரைத் தாக்கிய இரு நபர்களில் ராமசுப்பு என்பவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

முதற்கட்ட விசாரணையின்படி, ராமசுப்புவின் மீது திரு.லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியதாகத் தெரிய வருகிறது. இதுகுறித்து, காவல் துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் பணியிலிருக்கும்போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தினை அளித்துள்ளது. தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது. 

இக்கொடிய சம்பவத்தில் உயிரிழந்த திரு. லூர்து பிரான்சிஸ் அவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAO Loorthu francis murder case CM Stalin Announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->