தவெக தலைவருடன் ஒரே மேடையில் இருப்பதை உறுதி செய்த விசிக தலைவர்..! - Seithipunal
Seithipunal


வரும் டிசம்பர் மாதம் 6-ந்தேதி சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் புத்தக வௌியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்பார்களா? கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளதாவது:- விஜய் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது. 

அப்போது தவெக மாநாடு நடைபெறவில்லை. இந்தப் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நான் பெற்று கொள்வதாகவே திட்டமிடப்பட்டது. நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

இன்னொரு கூட்டணிக்கு போவதற்கு என்ன தேவை எழுந்துள்ளது. நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாலே அணி மாறி விடுவோம் என்பது எந்த வகை உளவியல்? என்று கேள்வி எழுப்பி விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck leader thirumavalavan confirmed participate same stage with tvk leader vijay


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->