மோடி அரசே நீதியைக் கொல்லாதே.! மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் விசிக தலைவர்.! - Seithipunal
Seithipunal


மோடி அரசே நீதியைக் கொல்லாதே.! மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் விசிக தலைவர்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சார்ந்த பாஜக எம் பி யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும், இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டி, நாட்டின் தலைநகரான டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். 

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மல்யுத்த வீராங்கனைகள் போராடி வந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் இருந்து போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால், வீராங்கனைகள் நேற்று தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அறிவித்துள்ளனர். 

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவாக குரல் எழுப்பினர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

"காமப்பித்து வன்கொடுமைகளைச் செய்த பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண்சிங் -ஐ கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும்  வீரர்களின்  உறுதிமிக்க அறப்போர் வெல்லட்டும். மோடி அரசே, நீதியைக் கொல்லாதே!  குற்றஞ்சாட்டப்படும் நபரைப் பாதுகாத்திட முயற்சிக்காதே! " என்று அவர் பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck leader thirumavalavan support to wrestlers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->