வேலூர் | ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு! மக்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


வேலூர், சத்துவாச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முதல் காகித பட்டறை தொழிற்சாலை வரை இருந்த சுமார் 32 வீடுகள் மற்றும் கடைகள் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளன. 

இதனால் கடந்த ஒரு வாரமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முயற்சி செய்து வந்தனர். இதில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அவர்களாகவே அகற்றி விட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். 

மேலும் கால அவகாசம் கொடுத்தும் அங்கிருந்தவர்கள் யாரும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இந்நிலையில் இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரத்துடன் காகித பட்டறைக்கு வந்து ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த பணியின் போது வேலூர் துணை காவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். 

வேலூர்-ஆற்காடு சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். 

இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டிடங்கள் அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore encroached houses demolition


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->