#வேலூர் || ஓட்டயைப்போட்டு ஆட்டையைப்போட்ட கள்ளக்குறிச்சி முருகன், பிரபாகரனை கைது செய்த தனிப்படை போலீசார்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 24ம் தேதி காட்பாடி அருகே நகை அடகு கடை சுவற்றில் ஓட்டை போட்டு, 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகன் மற்றும் பிரபாகரன் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்க்காடு கூட்ரோடு பகுதியில் இயங்கி வரும் ஒரு நகை அடகு கடையில், சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் கடந்த 24ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், நகை அடகு கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நடத்திய கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகன் மற்றும் பிரபாகரன் ஆகிய 2 பேரை போலீசார் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore serkadu robbery case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->