எல்லையில் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்! போலீஸ் வாகனம் சூறை, மண்டை உடைப்பு, கலவரம்! - Seithipunal
Seithipunal



ஆந்திர மாநிலத்திற்கு செல்லக்கூடிய தமிழக பேருந்துகள் வேலூர் மற்றும் குடியாத்தம் பேருந்து நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கும் பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநில அரசின் நீர் மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, நேற்று சித்தர் மாவட்டம், புங்கனூர் பகுதிக்கு சென்று இருந்தார்.

அப்போது அவரை தடுத்து நிறுத்துவோம், 'கோ பேக் சந்திரபாபு நாயுடு' என்று  ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர்.

மேலும் சந்திரபாபு நாயுடு சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் முயற்சி செய்தனர். இதனால் இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் உண்டானது.

ஒருவரை ஒருவர் கற்கள், செருப்பு, சோடா பாட்டில், மது பாட்டில் ஆகியவற்றால் தாக்கி கொண்டனர். தொடர்ந்து போலீசார் இரண்டு கட்சி தொண்டர்களையும் லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த வன்முறை கலவர சம்பவத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

போலீஸ் வாகனங்கள் தீக்கரையாகியது. பத்துக்கும் மேற்பட்ட போலீசாரின் மண்டை உடைக்கப்பட்டது. இது குறித்து இரு கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து ஆந்திராவின் பல்வேறு சாலைகளில் மரம், கல் உள்ளிட்டவற்றை அடுக்கி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு வேலூரில் இருந்து செல்லக்கூடிய தமிழக அரசு பேருந்துகள் அந்தந்த பேருந்து நிலையங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் வேலூர் மாவட்டத்திற்கு உண்டான பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore TNGovt Bus Stop in border


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->