வேலூர் அருகே எருமை கிடா வெட்டி வழிபாடு செய்த மக்கள்!
vellur temple festival
வேலூர்: மராட்டியபாளையம் அருகே உள்ள ஏ.புதூர் சுப்புநாயுடு பாளையம் கிராமத்தில் நேற்று காலை 10 மணி அளவில் கெங்கையம்மன் சிரசு ஏற்றம் திருவிழா நடந்தது.
கெங்கையம்மனுக்கு எருமை கிடா ஒன்றை பலி கொடுத்து, எருமையின் முன்னங்கால்கள் கோவில் முன்புற வாசற்படியிலும் பின்னங்கால்களை வெட்டி கோவில் பின்புறத்திலும் வைக்கப்பட்டன.
இதனை அடுத்து எருமை கிடா தலையை கோவில் முன்பு வைத்து அதன் மீது விளக்கேற்றி, கிராம மக்கள் வினோதமான முறையில் வழிபாடு செய்தனர்.
இது குறித்து கிராம மக்கள், எருமை கிடாவின் தலையை வெட்டி அதன் மீது விளக்கு ஏற்றுவதை சிரசு ஏற்றம் என்று அழைக்கப்படும். இவ்வாறு செய்யும் போது அம்மனுக்கு அதீத சக்தி மற்றும் உயிர் வரும் என்று முன்னோர்கள் காலத்தில் இருந்து நம்பப்படுகிறது.
மேலும், கெங்கை அம்மனின் ஆக்ரோஷமான கோபத்தை தணிக்க சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, கிராம மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி சிறப்பாக வாழ வேண்டும் என முதலில் எருமைக்கிடா பலி கொடுப்பது வழக்கம்.
அது போல, கோவிலை சுற்றி பலி கொடுக்கப்பட்ட எருமை கிடா உடல் பாகங்களை வைத்து மலை பெய்ய வேண்டி பலியிட்டு எருமை கடாவின் தலை மீது விளக்கேற்றி வழிபடுவோம். இதனை போன்று ஒவ்வொரு ஆண்டும் திருவிழா செய்வதாக ஊர் பொதுமக்கள் கூறினர்.